நடிகை சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா?.. அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்காங்களே..!

By Nanthini on கார்த்திகை 14, 2024

Spread the love

தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. 1997 ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு வெளியான காதலே நிம்மதி படம் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வந்தார். குறிப்பாக உயிர், தனம் மற்றும் நேபாளி என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

Mother complained to actress Sangeetha at the Women's Commission: "Trying  to Grab Her Home" | மகளிர் ஆணையத்தில் நடிகை சங்கீதா மீது தாய் புகார் :  “வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறார்”

   

நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் தான் பிதாமகன். பாலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

Singer krish and Actress sangeetha couple goal photos on instagram | Singer  krish and Actress sangeetha | மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே -  க்ரிஷ் - சங்கீதா போட்டோ ஆல்பம்

 

இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சங்கீதா சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வந்தார். அது மட்டுமல்லாமல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக இவர் தொகுத்து வழங்கினார்.

42 வயதான நடிகை சங்கீதா-கிரிஷ்ஷின் மகளா இது? அம்மாவை மிஞ்சிய அழகிய  புகைப்படம் - விடுப்பு.கொம்

இந்த நிலையில் சங்கீதா சமீபத்தில் கலந்து சினிமா தோழிகளுடனும் குடும்பத்தினருடனும் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவில் சங்கீதா மற்றும் கிரிஷ் தம்பதியின் மகள் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவின் மகள் இப்படி வளந்துட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sangitha Santharam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sangithakrish)