தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார் மாதுரி. ஆனால் அவையெல்லாம் கிளாமர் வேடங்களே. அதன் பின்னர் தமிழில் மனிதன் மற்றும் சிவா ஆகிய படங்களில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். விசு படங்களில் நடிக்க தொடங்கிய பின்னர் அவர் மீதான கிளாமர் இமேஜ் மாறியது.

பாலைவன ரோஜாக்கள்’ ’மனிதன்’ ’மேகம் கருத்திருக்கு’ ’ஒரே ரத்தம்’ ’மைக்கேல் ராஜ்’ ’காவலன் அவன் கோவலன்’ ’பரிசம் போட்டாச்சு’ ’வளையல் சத்தம்’, பெண்மணி அவள் கண்மணி’ ’குற்றவாளி’ ’காளிச்சரண்’ ’இரண்டில் ஒன்று’ ’சகாதேவன் மகாதேவன்’ ’மூடு மந்திரம்’ ஆகியவை அவர் நடித்ததில் குறிப்பிட்டு சொல்லத்தகுந்தவை. சினிமா உலகம் குறித்து நன்கு தெரிந்தும் வாழ்வில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார்.

மலையாளத்தில் ஆபாச படங்களில்நடித்துக்கொண்டிருந்த மாதுரி தமிழில் சம்சாரம் அது மின்சாரம் படத்திற்கு பின் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி ரஜினிக்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்தார். இதன்பிறகு வாய்ப்புகள் குவிந்தது. 90களின் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

1995க்கு பின் இவர் குறித்த தகவல் யாருக்குமே தெரியாமல் போனது. 2002 இல் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக மாதுரி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
