தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் சினிமா மற்றும் அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். நெப்போலியன் மூத்த மகனுக்கு அரியவகை தசைப்பிடிப்பு நோய் இருந்ததால் சரியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றனர். அங்கு நெப்போலியன் ஐடி கம்பெனி உருவாக்கி பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தார்.

பிறகு இந்த பொறுப்புகளை எல்லாம் மூத்த மகன் தனுஷின் கையில் ஒப்படைத்தார். இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியில் வசிக்கும் அக்ஷயா என்ற பெண்ணை தனது மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தார். அது தொடர்பான தகவலை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில், தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டு அங்கு பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். இந்த திருமணத்தை கோலாகலமாக தமிழ் முறைப்படி நடத்த விரும்பிய நெப்போலியன் தனது மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் பயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ஜாம் ஜாம்னு திருமணத்தை 100 கோடி செலவில் நடத்தி முடித்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், என் அம்மா எனக்கு 18 வயதாக இருக்கும்போது கேன்சரில் இறந்துவிட்டார். அவருக்கு காபி குடிப்பது ரொம்பவே பிடிக்கும். அவருக்கு பிடித்த விஷயத்தை நான் விட வேண்டும் என்று நினைத்தேன் அதற்காக 40 வருஷமாக காபி குடிக்காமல் இருக்கிறேன் என்று மனம் உடைந்து பேசியுள்ளார்.
