இரண்டரை வருட உழைப்பு.. கங்குவா படத்திற்கு குறைந்த சம்பளம் வாங்கிய சூர்யா.. அதற்கு பின்னால் உள்ள மாஸ்டர் பிளான்..!

By Nanthini on கார்த்திகை 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது அவர் கங்குவா என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ள நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி, வில்லனாக பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர கருணாஸ் மற்றும் நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து உள்ள நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

வாயைப் பிளந்து பார்ப்பார்கள்.. கங்குவா படத்துக்கு ஓவர்ஹைப் ஏற்றிய சூர்யா..  அடுத்த வாரம் சம்பவம் தான்! | Suriya says everyone will open their mouth  while watching ...

   

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  சுமார் 350 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்காக சுமார் இரண்டு ஆண்டுகள் தீயாய் உழைத்து உள்ள நடிகர் சூர்யா இப்படத்தின் வெற்றியை மலை போல் நம்பி இருக்கின்றார்.

   

கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில்  டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ்: ஞானவேல் ராஜா

 

ஏனென்றால் அவர் நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. கங்குவா படத்திற்காக இரண்டு ஆண்டுகள் உழைத்திருந்தாலும் அப்படத்திற்கு மிகவும் கம்மியான சம்பளத்தை மட்டுமே சூர்யா வாங்கியுள்ளார். அதன்படி அவர் இப்படத்தில் நடிக்க வெறும் 39 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். அவரைவிட நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கி வரும் நிலையில் சூர்யா குறைந்த சம்பளம் வாங்கியதற்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது.

நலமுடன் இருக்கிறேன்” - சூர்யா @ 'கங்குவா' படப்பிடிப்பு விபத்து | actor  surya msg to the fans after had accident in kanguva shoooting spot -  hindutamil.in

 

அதாவது கங்குவா படத்தின் லாபத்தில் இருந்து ஷேர் வாங்கவும் சூர்யா டீல் போட்டுள்ளார். சூர்யாவுக்கு அடுத்தபடியாக சங்குவார் திரைப்படத்தில் அதிக சம்பளம் வாங்கியது நடிகர் பாபி தியோல்தான். அவர் நடிக்கும் முதல் தமிழ் படமாக இது இருந்தாலும் இந்த திரைப்படத்திற்காக அவர் வெறும் ஐந்து கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ள நிலையில் அடுத்தபடியாக கங்குவா நாயகி திஷா பதானி படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.