300 பேர் முன்னாடி டெல்லி கணேஷ் காலில் விழுந்த தல அஜித்.. காரணத்தை கேட்டா ஆடிப் போயிருவீங்க..!

By Nanthini on கார்த்திகை 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அவர்களின் ஒருவர் டெல்லி கணேஷ். இவர் தவிர்க்க முடியாத நடிகர். வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடிக்க கூடியவர். இவர் பாலச்சந்திரன் பட்டறையிலிருந்து வந்தவர் .ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரோடும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்

   

 

   

இவர் 1979 ஆம் வருடம் துறை இயக்கத்தில் வெளியான பசி என்ற படத்தில் முனியாண்டி என்ற ரிக்ஷா டிரைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . அதற்காக அவருக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. சமீபத்தில் கூட ஒருசில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  திடீரென்று காலமானார்.இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

 

Delhi Ganesh: பேரிழப்பு.. இந்த ஆண்டு மட்டும் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா டெல்லி  கணேஷ்.. சிகரம் | Delhi Ganesh biography and his last three movies released  this year - Tamil Filmibeat

இந்த நிலையில் டெல்லி கணேஷ் பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் நடிகர் அஜித் பற்றி டெல்லி கணேஷ் பேசியுள்ளார். அதில், அஜித் அவ்வளவு பெரிய ஹீரோ. எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிட மாட்டார். அப்படியே செட்டி இருக்கு பிரச்சனை வந்தாலும் செல்போனை காதில் வைத்தபடியே நகர்ந்து சென்று விடுவார். அவர் குடும்ப விஷயங்களை பேசுவார். நம்ம குடும்ப விஷயத்தை சொன்னாலும் கேட்பார். அஜித்துடன் பல படங்களில் நடித்துள்ளேன்.

Delhi Ganesh shares his shooting experience with Ajith | Tamil Movie News -  Times of India

ஹைதராபாத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் செட்டுக்கு நான் சென்று இருந்தேன். அங்க அஜித் டயலாக் பேப்பரை பார்த்து படித்துக் கொண்டிருந்தார். நான் வந்ததை அவர் சரியாக கவனிக்கவில்லை. சட்டென திரும்பி என்னை பார்த்ததும், அப்பா எப்போ வந்தீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு நல்லா இருக்கீங்களா என்று கேட்டுவிட்டு அங்க அத்தனை பேர் சுத்தி இருக்கிறப்ப சுமார் 300 ஆர்டிஸ்ட் முன்னாடி கொஞ்சம் கூட யோசிக்காம என்னோட காலுல விழுந்து அஜித் வழங்கினார். பிறகு குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி நல்லா விசாரிச்சு பேசினாரு. ரொம்ப நல்ல மனுஷன் என்று டெல்லி கணேஷ் அஜித் பற்றி புகழாரம் பேசிய பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.