mgr

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது… ஏழை மூதாட்டிக்கு MGR கொடுத்த பரிசு…

By admin on கார்த்திகை 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. இன்று இளம் தலைமுறை நடிகர்களுக்கு உதாரணமாக இருப்பவர் MGR.

   

MGR படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் க்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். படிப்படியாக முன்னேறியே MGR ரின் படங்கள் வெளிவந்தாலே ஹிட்டு தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR.

   

தன்னை ஆதரித்து அழகு பார்த்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டில் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தினார். தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராக இருந்து மறைந்தார் MGR .

 

எம்ஜிஆர் மிகவும் நல்ல மனிதராக இருந்திருக்கிறார். உதவி செய்யும் மனம் கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல். யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் அவர்களுக்கு உடனடியாக செய்து கொடுப்பவர் எம்ஜிஆர். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அது என்னவென்று இனி காண்போம்.

எம்ஜிஆர் முதலமைச்சர் ஆன பிறகு கோட்டைக்கு செல்வதற்கு முன்பு எம்ஜிஆர் தனது தாயாருக்காக கட்டப்பட்டிருக்கும் கோயிலுக்கு வந்து வணங்கிவிட்டு தான் செல்வார். அப்படி எம்.ஜி.ஆர் போகும் வழியில் ஒரு வயதான மூதாட்டி தனது பேத்தியுடன் நின்று ருக்கிறார். அதை பார்த்த எம்ஜிஆர் வண்டியை உடனே நிறுத்தி என்னவென்று கேட்க சொல்லி இருக்கிறார்.

அந்த பாட்டி நான் மிகவும் ஏழை என்னுடைய பேத்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இதற்கான பணம் என்கிட்ட இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த மூதாட்டி உடனே எம்ஜிஆர் தனது உதவியாளரிடம் அந்த மூதாட்டியை பற்றி விசாரிக்க சொல்லி உண்மையிலேயே கஷ்டப்பட்டவர் என்று தெரிந்தவுடன் அவரது பேத்தியின் கல்யாணத்துக்கு அன்று மற்ற சீர்கள் வருவதற்கு முன்பாகவே எம்ஜிஆரின் சீர் சென்றிருக்கிறது. அது மட்டும் இல்லாம அந்த மூதாட்டியின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார் எம்ஜிஆர். இதைத்தான் அந்த மூதாட்டி கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல எனக்கு எம்ஜிஆர் செய்திருக்கிறார் என்று தன் வாழ்நாள் முழுவதும் கூறிக் கொண்டிருந்தாராம் அந்த ஏழை மூதாட்டி.