மருத்துவமனையில் இருக்கும் அம்மாவுக்கு.. குடும்பத்துடன் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகர்..!!

By Nanthini on கார்த்திகை 12, 2024

Spread the love

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ராஜ்கமல். சீரியல் நடிகரான இவர் ஜெயா தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான சஹானா என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் மிகவும் பிரபலமான ஆனந்தம், செல்வி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் சரோஜா, லிங்கா மற்றும் நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகையான லதா ராவை திருமணம் செய்து கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை பிரபலங்கள் வீட்டில் அரங்கேறிய சோகம்... - மனிதன்

   

 

   

மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். தமிழில் மெட்டிஒலி, செல்வி மற்றும் திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்து தமிழ் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார். ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கன் திரைப்படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு ராஜ்கமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு லாரா மற்றும் ராதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

RajKamal,இதனால தான் ராஜ்கமல் லதா ராவை கட்டிக்கிட்டாராம்யா! - latha rao, rajkamal's latest video is too cute to miss - Samayam Tamil

இந்த நிலையில் நடிகர் ராஜ்கமல் தனது மனைவியுடன் சேர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ராஜ்கமல் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அம்மாவுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். தனது மனைவி மற்றும் மகள்களுடன் சேர்ந்து மருத்துவமனைக்குச் சென்று கேக் வெட்டி கொண்டாடிய அம்மாவை சந்தோஷப்படுத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

rajkamal ganesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rajkamal.actor)