பிக்பாஸ் வீட்டிலிருந்து காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கேப்டன்.. செம குஷியில் சீரியல் நடிகை..!!

By Nanthini on கார்த்திகை 12, 2024

Spread the love

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்டு கார்டு மூலம் கலந்து கொண்ட நடிகை அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டிலை வென்றது அதுதான் முதல் முறை. பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனாவும் டிவி சீரியல் நடிகரான அருண் பிரசாத் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்படுகிறது. இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அற்புதமான உணர்வு..' அருணின் பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்ட அர்ச்சனா! -  காதலிப்பதை உறுதி செய்தாரா? |archana post arun birthday wishes - Vikatan

   

அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே தான் ஒரு பெண்ணுடன் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் வெளியே சென்றதும் திருமணம் நடைபெறும் எனவும் அருண்பிரசாத் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலை ரசிகர்கள் ஏறத்தாழ உறுதி செய்தனர். இப்படியான நிலையில் அருண் பிரசாத் கேமரா முன்பு வந்து நின்று தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஹாப்பி பர்த்டே டார்லிங் என அருண் பிரசாத் சொன்ன வீடியோவை X தளத்தில் பகிர்ந்து அர்ச்சனா, என் பிறந்தநாள் நல்லபடியாக முடிந்தது.

   

பிக் பாஸ் 8: நள்ளிரவில் கேமரா முன்பு அருண் பேசிய வார்த்தை.. அப்போ அர்ச்சனா  என்ட்ரியா? | Bigg Boss Tamil Season 8: Arun Prasad Celebrates Girlfriend  Archana's Birthday with Heartfelt ...

 

இதைப் பார்க்க இரவு ஒரு மணி வரை காத்திருந்தேன், நன்றி கேப்டன் என தெரிவித்துள்ளார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக அருண் பிரசாத் இருக்கிறார். அதனால் தான் அவரின் பெயரை குறிப்பிடாமல் கேப்டன் என்று அர்ச்சனா சொல்லி இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அருண்பிரசாத்தை அர்ச்சனா காதலிப்பதை உறுதி செய்துள்ளனர். அர்ச்சனா பரிந்துரை செய்துதான் அருண் பிரசாத்துக்கு பிக் பாஸ் எட்டாவது சீசனில் வாய்ப்பு கிடைத்ததாக முன்பு தகவல் வெளியான நிலையில் அருணை காதலிப்பதை அர்ச்சனா தற்போது உறுதி செய்துள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.