தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அவர்களின் ஒருவர் டெல்லி கணேஷ். இவர் தவிர்க்க முடியாத நடிகர். வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடிக்க கூடியவர். இவர் பாலச்சந்திரன் பட்டறையிலிருந்து வந்தவர் .ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரோடும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

இவர் 1979 ஆம் வருடம் துறை இயக்கத்தில் வெளியான பசி என்ற படத்தில் முனியாண்டி என்ற ரிக்ஷா டிரைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .அதற்காக அவருக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. சமீபத்தில் கூட ஒருசில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று காலமானார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் டெல்லி கணேஷ் சினிமாவிற்கு முன்பாக டெல்லியில் இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளாராம். அதன்பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு நாடகங்களில் நடிக்க ஆர்வமாக வந்துவிட்டார். அதுவே அவருக்கு டெல்லி கணேஷ் என்று பெயர் வர காரணமாகி விட்டது. இவர் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரு சூழ்நிலையில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடிப்பாராம்.

அதாவது டெல்லி கணேஷ் தான் நடிக்கும் படங்களில் பிணமாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று ஸ்டிரிக்ட்டாக கூறிவிடுவாராம். அப்படி நடிக்க கூடாது என்பதை தனது ரூல்ஸ் புக்கில் வைத்துள்ளார் டெல்லி கணேஷ். மேலும் ஷூட்டிங்க் 8 மணி என்று சொன்னால் 7 மணிக்கே மேக்கப்புடன் வந்து நிற்பாராம். அதுக்காகவே மற்றவர்கள் அவரை பார்த்து பயப்படுவார்களாம். அந்த அளவிற்கு டெல்லி கணேஷ் நடிப்பின் மீது அதிக அக்கறை வைத்திருந்தார்.
