பேசிட்டு இருக்கும்போதே கன்னத்துல பளார் கிட்ட விஷால்.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த ரோபோ சங்கர்..!

By Nanthini on கார்த்திகை 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ரோபோ சங்கர். இளம் வயதிலேயே நடிகராக வேண்டும் என்று முடிவு செய்த ரோபோ சங்கர் பட வாய்ப்புகளை தேட தொடங்கினார். விஜயகாந்தின் தர்மசக்கரம், ரஜினியின் படையப்பா உள்ளிட்ட படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்த ரோபோ சங்கருக்கு 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் நுழைந்த ரோபோ சங்கர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

ரோபா சங்கருக்கு என்னதான் ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள் | Tamil cinema what  happend to actor robo shankar fans confused

   

அதன் பிறகு தனுஷ் உடன் மாரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.  தற்போது சினிமாவில் பிஸியான காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரோபோ சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஷால் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், விஷால் எப்பவுமே ரொம்ப ஜாலியா இருப்பாரு. அப்படிதான் ஒரு நாள் இரும்புத்திரை சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, எதிரில் ஹீரோயினி அமர்ந்து கொண்டு இருந்தாங்க, அப்போ ரோபோ இப்போ நான் உங்களை அடிக்கிறேன் என்று கூறிவிட்டு விஷால் என்ன சப்புனு கன்னத்துல ஆரஞ்சுட்டாரு.

   

விஷால் என்னை கழுவிக் கழுவி ஊத்தினார், வெளியே அனுப்பச் சொன்னார்: ரோபோ ஷங்கர்  | Vishal scolds me like anything: Robo Shankar - Tamil Filmibeat

 

எனக்கு என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல. இவ்ளோ பணத்த போட்டு நான் படம் எடுத்துட்டு இருக்கேன் உனக்கு சோறு ரொம்ப முக்கியமா, இப்போ இந்த இடத்துல நீங்க சூட் எடுக்க இருக்கணும், சோறு தான் உங்களுக்கு முக்கியமா போயிருச்சா, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டா செத்தா போயிடுவீங்க அப்படின்னு விஷால் என்னிடம் கேட்டார். நானும் கன்னத்துல கை வச்சிக்கிட்டு அழுகுற மாதிரி போயிட்டேன். உடனே முதல் நாள் சூட்டிங் வந்திருந்த அந்த ஹீரோயின் வேர்த்து விறுவிறுத்து, சார் எனக்கு பிளைட் டிக்கெட் போடுங்க நான் இந்த படத்துல நடிக்கல போயிடுறேன் என்று சொன்னாங்க. உடனே நான் இல்லம்மா அவர் சும்மா காமெடிக்கு தான் அப்படி பண்ணாரு நாங்க வழக்கமா இப்படித்தான் பண்ணிப்போம் என்று சொல்லி அவங்களை சமாதானப்படுத்துன. விஷால் எப்பவும் இப்படித்தான் ஜாலியா இருப்பாரு என்று ரோபோ சங்கர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.