அம்மாடியோ, சமந்தா அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை இவ்வளவா?.. விலையைக் கேட்டாலே தல சுத்துதே..!

By Nanthini on கார்த்திகை 11, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பழமொழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தென்னிந்திய சினிமாவின் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர்.

   

விவாகரத்திற்கு பிறகு சமந்தா தன் கெரியரில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கடந்த இரண்டு வருடமாக சமந்தா மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வந்த தகவல் அனைவரும் அறிந்தது தான். இதனால் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து அவர் பிரேக் எடுத்துக் கொண்டார்.

   

 

சமீபத்தில் தான் அவர் குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். தற்போது அவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து சிட்டாடல் என்ற வெப் தொடரில் சமந்தா நடித்துள்ளார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்தத் தொடர் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சமந்தா இந்த வெப் சீரிஸின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டார்.

BVLGARI Serpenti Quartz Women watch in Oval case & Grey Dial

அந்த நிகழ்ச்சிக்காக சமந்தா தனது விருப்பமான வடிவமைப்பாளரும் நல்ல நண்பருமான கிரேஷா பஜாஜ் வடிவமைத்த தங்க நிற ஆடையை அணிந்திருந்தார். அதோடு அவர் அணிந்திருந்த தங்க வளையல் கடிகாரம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. அந்த கடிகாரம் பல்கேரியில் இருந்து வாங்கப்பட்டதாகவும் அந்த கடிகாரத்தின் விலை ஒரு சொகுசு காரை வாங்கலாம் எனவும் கூறப்படுகிறது. பல்கேரியில் வாங்கப்பட்ட அந்த கடிகாரத்தின் பெயர் serpent Tubogas Watch என்று கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வைரத்தால் ஆன அந்த வாட்ச்சின் விலை சுமார் 45,47,000 ரூபாயாகும். தற்போது சமந்தா அந்த பாட்சை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.