மலையாளத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பாப்பின்ஸ் என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பார்வதி நாயர்.

மாடலிங் துறையில் பிசியாக இருந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் தமிழில் அறிமுகமானதும் அவர் நடித்த முதல் திரைப்படமே அஜித் படம் தான். அதாவது அஜித் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.

பார்வதி நாயரின் குடும்பம் முழுவதும் துபாயில் உள்ளது. இவருடைய சகோதரர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் செலக்டராக பணியாற்றியுள்ளார். பார்வதியின் தந்தையும் துபாயில் பெரிய தொழிலதிபராக உள்ளார்.

அவருடைய தாய் ஒரு கல்லூரி பேராசிரியை. தனது பள்ளி படிப்பை அபுதாபியில் முடித்த பார்வதி நாயர் பிறகு இந்தியா வந்து கல்லூரி படிப்பை கர்நாடகாவில் முடித்தார்.

படித்து முடித்த கையோடு மாடலிங் துறையில் கலக்கி வந்த பார்வதி நாயர் மிஸ் கர்நாடகா அழகி போட்டியில் கலந்துகொண்டு டைட்டிலும் வென்றார். இதனைத் தொடர்ந்து மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் பார்வதி நாயர் நியமிக்கப்பட்டார்.

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கமல்ஹாசன் உடன் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வருகின்றார். குறிப்பாக இந்தியில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 83 என்ற திரைப்படத்தில் கவாஸ்கர் மனைவி கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்திருந்தார்.

இப்படி சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த பிசியாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

