என்னையே திட்டி பாட்டு எழுதுறீங்களா..? சாமர்த்தியமாக காரியத்தை முடித்த எம்ஜிஆர்… வியந்துபோன பட்டுக்கோட்டை…!!

By Soundarya on கார்த்திகை 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும்.

MGR Death Anniversary,MGR: இன்று எம்.ஜி.ஆர்., 31வது நினைவு தினம் : மக்கள்  மனதில் நீங்காத மாமனிதர்! - former chief minister mg ramachandran 31st death  anniversary special - Samayam Tamil

   

1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன். எம்ஜிஆர் எப்போதும் தன்னுடைய படத்தில் இருக்கும் பாடல் வரிகளில் முக்கியத்துவம் காட்டுவாராம். சில கலைஞர்கள் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.

   

எம்ஜிஆர்.,யின் அரசியல் அடித்தளத்தில் முதல் செங்கல் 'பட்டுக்கோட்டையார்'

 

ஆனால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு அது பிடிக்கவில்லை. அரசிளங்கோமதி படத்திற்கு பாட்டு எழுத பட்டுக்கோட்டை மறுத்துவிட்டார். ஆனால் எம்ஜிஆர் அவரிடம் சென்று பாடல் எழுதுமாறு பட்டுக்கோட்டையிடம் கேட்டுக்கொண்டார். இதனால் அரைமனதாக ஒத்துக்கொண்டார் எம்ஜிஆர். அது சமூகத்துக்கு புத்திமதி சொல்லும் ஒரு பாடல். ஆனால் பட்டுக்கோட்டை அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சின்ன பயலே சின்ன பயலே என்று எம்ஜிஆரை திட்டி பாடலை எழுதினார் .

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா - படம்: அரசிளங்குமரி. - YouTube

அன்று பெரியவர் என்றால் சக்கரப்பாணியும், சின்னவர் என்றால் எம்ஜிஆரையும் குறிக்கும். ஆனால் எம்ஜிஆர் அந்த பாடலில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சாதுரியமாக நடித்தார். அது கதையோடு ஒத்துப்போனது. இதனால் வியந்து போனாராம்  பட்டுக்கோட்டை.