சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி.. வெளியாகி வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

By Soundarya on கார்த்திகை 7, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் மீது பெண்கள் இருக்கும் இடங்களில் மோசமாக நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் ரெட் கார்ட் கொடுத்த்து வெளியே அனுப்பப்பட்டார்.

   

ஆனால் குற்றச்சாட்டை விசாரிக்காமல் பெண்களுக்கு ஆதரவு கொடுத்து கமலஹாசன் முடிவு எடுத்த காரணத்தினால் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்த நிலையில் வெளியேறிய பிரதீப் ஆதரவாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

   

 

அன்று முதல் இன்று வரை என்ன செய்தாலும் அவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். அந்த வகையில் பிரதீப் ஆண்டனிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது .

அதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்து விட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது திருமணம் குறித்த கேள்விக்கு, காசு சேர்த்து வைத்த பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வேன் இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென்று திருமணம் முடிந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியாகியுள்ளது. இவருடைய திருமணம் பிரமாண்டமாக நடைபெறாமல் சிம்பிளாக நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.