தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் ஒவ்வொரு நாளும் ஒரு தத்துவம் சொல்வதுண்டு. அந்தவகையில் என்னைக்காவது கடவுள் நம்மை ஏன் படைத்தான் என்று யோசித்திருக்கோமா? முக்கால் வாசி கடவுள் நம்மை ஏன் படைத்தான் என்பது தெரியாமலே சேது போகிறோம். எப்போதும் பேசி கொண்டே தான் இருக்கிறோம். என்னைக்காவது நம்மளோட பேச யாருமே இல்லையென்றால் பயந்து போய் யாருக்காவது போன் பண்ணி பேசி நம்முடைய அமைதியை கண்டுபிடிக்க முடியாமல் போகிறோம்.

#image_title
கடவுளும் அமைதியை நமக்கு உணர்த்த நினைக்கிறார். ஆனால் நாம் அதை கண்டுபிடிக்க மாட்டேங்குறோம். நாம் ஒரு மணி நேரம் அமைதியாக இருந்து பார்த்தான் நம்மை சுற்றி ஓம் ஓம் என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இதை நாம் உணர்ந்து விட்டால் நமக்கு அந்த அமைதி புரிந்து கடவுள் நம்மை படைத்ததற்கான அர்த்தம் புரியும். கடைசியில் நம் இறப்புக்கு முன் 10 வருடங்களுக்கு முன் ரொம்ப அழகாக இருக்கும். அந்த இறப்பை பற்றி நாம் கவலை படவே மாட்டோம் என்று கூறியுள்ளார்.
