ரெண்டு பெரும் வேற வேற வீட்ல இருந்தாலும்…. அந்த விஷயத்துல சரியா நடந்துக்கிட்டாங்க… ராமராஜன் மகள் ஓபன் டாக்..!!

By Soundarya on கார்த்திகை 4, 2024

Spread the love

1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடிகரும் இயக்குனருமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர். காதலித்து திருமணம் செய்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருமனதாக பேசி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

#image_title

அந்த காலகட்டத்தில் நளினி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தினார். அதுபோல ராமராஜனும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.ராமராஜனும், நளினியும் இணைந்து மனசுக்கேத்த மகராசா, காவலன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

   
   

#image_title

 

கடந்த 2014-ஆம் ஆண்டு நளினி ராமராஜனின் மகன் அருணுக்கும் பவித்ரா என்ற பெண்ணுக்கும் சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதே போல மகள் அருணாவின் திருமணத்திற்கும் ராமராஜன் வந்து தனது மகளை வாழ்த்தி உள்ளார்.

#image_title

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நளினி மகள் அருணா, அப்பா அம்மாவுக்கு ரொம்ப affection இருக்கு. பிரியுறதுக்கு முந்திய நாளே எங்களை உக்கார வச்சி பேசினாங்க. பிரிய போறதே முந்தின நாள் நைட் தான் தெரியும். நாங்க வேறு வேறு வீட்ல இருப்போமே தவிர உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லன்னு சொன்னாங்க. பிரிவு கூட அழகு தான்னு அப்பா அம்மா எங்களுக்கு காமிச்சாங்க என்று பேசியுள்ளார்.