52 வயதில் தன்னை விட வயது குறைந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நடிகை தபு.. ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on கார்த்திகை 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை தபு. இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் இவரை தெரியாமல் இருக்கலாம். ஆனால் 90களில் இளைஞர்களின் கனவு கண்ணியாக இருந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்துள்ளார்.

AK63: அஜித் ஜோடியாக நடிக்கப்போவது இவர் தானா?

   

இவருடைய அழகுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இவருடைய படங்களை ரசித்துப் பார்த்தனர். அழகு மற்றும் நடிப்பு என்று திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தனித்து ஜொலித்தவர். தமிழில் காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன், சினேகிதியே மற்றும் டேவிட் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

   

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹாலிவுட் செல்லும் நடிகை தபு

 

இப்படி சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் அடிக்கடி கிசுகிசுக்களிலும் சிக்கினார். தற்போது 52 வயதாகும் இவர் இன்றும் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக நடித்து வருகின்றார். இத்தனை ஆண்டு காலமும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக வாழ்ந்து வருகின்றார்.

இனியும் 30 வயதான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை” - நடிகை தபு  பகிர்வு | actress Tabu Doesn not Want To Play 30 Year Old On Screen -  hindutamil.in

ஆனால் அதற்கான காரணம் இன்று வரை தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தபு பற்றி ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது 52 வயதாகும் தபு தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தன்னைவிட வயது குறைந்த பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை தான் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.