இந்த வாரம் இவர் தான் Safe.. முடிவு செய்த பெண் போட்டியாளர்கள்.. வெளியானது இன்றைய ப்ரோமோ..!

By Nanthini on ஐப்பசி 25, 2024

Spread the love

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனந்திக்கு உரிமையில்லை முத்துக்குமரன் பதிலடி!வெளியாகியது இன்றைய 3 ஆவது  ப்ரோமோ .. | Tamil Cinema News

   

அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் போட்டியாளர் அரணவ் எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டியை நடைபெற்று வருகிறது. இதில் இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்களில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர்தான் அதிக ஓட்டுகளை வாங்கி முன்னிலையில் இருப்பதால் இவர்களைத் தொடர்ந்து தர்ஷா குப்தா, பவித்ரா மற்றும் அன்ஷிதா ஆகிய மூன்று பேரும் டேஞ்சர் ஜோனில் இருப்பதால் இவர்கள் மூவரில் ஒருவர்தான் இந்த வாரம் எளிமையாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

   

article_image1

 

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில், இந்த வாரம் நாமினேஷனில் உள்ள ஐந்து பெண் போட்டியாளர்களில் யார் safe என்று பெண் போட்டியாளர்களை ஆலோசித்து சொல்லுங்கள் என்று பிக் பாஸ் கூறுகிறார். இதில் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூற ஒவ்வொரு முறையும் நம்பல மக்கள் காப்பாற்ற மாட்டாங்க என்று சௌந்தர்யா கூற மறு பக்கம் அன்ஷிதா எதுவா இருந்தாலும் சந்திக்க நான் தயார் என்று கூறுகிறார். பிறகு அனைவரும் ஆலோசித்து ஒரு முடிவு எடுத்துள்ளனர். இதனால் பெண் போட்டியாளர்கள் இடையே சண்டை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.