என்னது, கேஜிஎஃப் புகழ் யாஷுடன் ஓவியா ஜோடியாக நடிச்சிருக்காங்களா?.. போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on ஐப்பசி 25, 2024

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யாஷ். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கன்னட படங்களில் நடித்து வருகின்றார். இவ்வாறு இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவரை பாப்புலர் ஆக்கியது கேஜிஎப் திரைப்படம் தான். பிரசாந்த் நீர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் மூலம் இந்தியா முழுவதும் நடிகர் யாஷ் ஃபேமஸானார். கே ஜி எஃப் படத்தில் ராக்கி பாய் என்ற டான் கதாபாத்திரத்தில் மாஸாக நடித்த ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர் கே ஜி எஃப் இரண்டாம் பாகத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.

   

 

   

தற்போது பான் இந்தியா நடிகராக சினிமாவில் வலம் வருகிறார். கே ஜி எஃப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யாஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் டாக்சிக். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகின்றார். இந்த நிலையில் பான் இந்தியா நடிகராக பலம் வரும் யாஷ் உடன் இணைந்து நடிகை ஓவியா ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

article_image3

அதாவது கிராடகா என்ற படத்தில் தான் ஓவியா ஜோடியாக நடித்துள்ளார். இது தமிழில் விமல் மற்றும் ஓவியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன களவாணி திரைப்படத்தின் கன்னட ரீமேக் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திலும் யாஷுக்கு ஜோடியாக ஓவியா தான் நடித்திருந்தார்.

article_image4

தமிழில் ஓவியாவுடன் விமல் ரொமான்ஸ் செய்வதை போல் கன்னடத்தில் யாஷ் செய்துள்ளார். தற்போது அந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அது மட்டுமல்லாமல் அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நடிகர் யாஷ் உள்ளார்.