இந்த வாரம் எலிமினேஷன் யார்…? இந்த மூன்று பேரில் ஒருவரா…? பெரும் எதிர்பார்ப்பில் பிக்பாஸ்-8…!!

By Soundarya on ஐப்பசி 25, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டாவது  சீசன் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது.

#image_title

ஒருவரையொருவர் தாக்கி பேசியும், சண்டையிட்டும் வருகிறார்கள். இதனால் வார கடைசியில் VJS போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். கமல்ஹாசன் போல் பொறுமையாக பேசாமல் அதிரடியாக பேசி வருகிறார். கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார்.

   
   

#image_title

 

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்குலின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் பெண்கள் அணியில் இருந்து தான் ஒருவர் வெளியேறப்போவதாக கூறப்படுகிறது.

#image_title

அந்தவரிசையில் தர்ஷா, பவித்ரா, சவுந்தர்யா ஆகிய மூன்று பேரின் ஒருவர் வெளியேற வாய்ப்பிருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  இதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.