வீரம் படத்தில் அஜித்துக்கு நான் தான் ஜோடி.. ட்ரெயின் பாத்ரூம்ல டிரஸ் மாத்துனேன்.. மனம் திறந்த ஜெய் பட நடிகை மனோ சித்ரா..!

By Nanthini on ஐப்பசி 24, 2024

Spread the love

தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான இன்னொருவன் என்ற திரைப்படத்தில் மனோஹா என்ற பெயரில் அறிமுகமானவர்தான் நடிகை மனோ சித்ரா. பிறகு இயக்குனர் மீனா கதிரவனை சந்தித்தபோது அடுத்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளார். அப்படி நடிகர் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மனோ சித்ரா. அந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் இவருக்கு அடுத்து பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு பெரிதாக கிடைக்கவில்லை.

   

2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்த பிறகு 2012 ஆம் ஆண்டு சீனு ராமசாமியின் நீர்ப்பறவை திரைப்படத்தில் மனோ சித்ரா துணை வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து 2014 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் விமலுடன் இணைந்து நேற்று இன்று படத்தில் நடித்தார். பின்னர் அஜித்தின் வீரம் திரைப்படத்திலும் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

 

அதில், அவள் பெயர் தமிழரசி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது டைரக்டர் போன் பண்ணி செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு புடவையை எடுத்துக்கிட்டு வந்துருங்கன்னு சொன்னாரு. நானும் எடுத்துகிட்டு அவசரமா கிளம்பி போனேன். ட்ரெயின்ல சூட் நடந்த சமயத்துல அங்க இருக்க பாத்ரூம்ல தான் டிரஸ் மாத்திக்கிட்டேன். ஒரு டிரஸ் மாத்தும்போது டிரெயின் நின்னுகிட்டு இருந்துச்சு. இன்னொரு டிரஸ் மாத்தும்போது டிரெயின் ரன்னிங்ல இருந்துச்சு. அந்த சமயத்துல நிறைய அழுது இருக்கேன். படமே வேணாம் விட்டுட்டு ஓடிடலாம்னு கூட எனக்கு தோணுச்சு.

அதன் பிறகு அஜித்தின் வீரம் படத்தில் நடிக்க என்ன கூப்பிட்டாங்க. எனக்கு கதை சொல்லும் போது முதலில் தான் தமன்னா இருப்பாங்க அப்புறம் போயிருவாங்க கடைசியா நீங்கதான் அஜித்துக்கு ஜோடியா இருப்பீங்க என்று என்கிட்ட கதையை சொல்லி என்னை கூட்டிட்டு போனாங்க. அப்புறம் என்ன சைடு ரோல் தான் பண்ண வச்சாங்க. முதல் நாள் பொறுத்துக்கிட்டு போயிட்ட இரண்டாவது நாள் போகும்போது என்னால முடியாது நான் கிளம்புறேன்னு சொல்லி அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. இந்த பிரச்சனை அஜித் சார் வரைக்கும் போச்சு. அப்புறம்தான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு அந்த படத்துல நடிச்சு முடிச்சேன் என்று இவர் பேசியுள்ளார்.