சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் பின்னர் தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் வெள்ளித்திரையில் நுழைந்தார்.

பல தடைகள் எதிர்ப்புகளையும் மீறி நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது எதார்த்தமான நடிப்பினால் மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராகவும் அனைவரும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி போரில் உயிரை நீத்தா ராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த பயோபிக் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் மேஜர் முகுந்த் அவர்களாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சோனி பிக்ச்சர் ஃபிலிம்ஸ் இந்தியாவுடன் இணைந்து கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்து வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் அமரன்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி புவான் அரோரா ஸ்ரீகுமார் ஷியாம் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரைலரை பார்க்கும்போதே நமக்கு அப்படி மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கிறது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை எந்த மாதிரி இருக்கும் எதெல்லாம் அவர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த ட்ரெய்லர் இருக்கிறது. ட்ரெய்லரே தரமாக இருக்கிறது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இப்போது இந்த ட்ரெய்லரை பார்த்த பின்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராகவே இந்த படத்தில் வாழ்ந்திருப்பது போல் இந்த ட்ரெய்லர் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த படத்திற்கான ஆவல் அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
