வட சென்னைதான் என்னோட பைபிள்.. அதுல இருந்துதான் என் மத்த படங்களுக்கு கண்டெண்ட் எடுப்பேன் –வெற்றிமாறன்!

By vinoth on ஐப்பசி 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

   

வெற்றிமாறனின் கனவுப்படமாக அவர் பல ஆண்டுகளாக வடசென்னைப் படம் பற்றி கூறியிருந்தார். அதை மூன்று பாகங்களாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதன் முதல் பாகத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். மற்ற இரண்டு பாகங்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறியிருந்தார். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் அதற்கான முன்னெடுப்புகள் தெரியவில்லை.

   

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பேசும்போது “வடசென்னை படத்தோட கதைதான் என்னோட பைபிள் மாதிரி. அதில் இருந்துதான் என்னுடைய மற்ற படங்களுக்கான கண்டெண்ட்டை எடுத்திருக்கிறேன். பொல்லாதவன் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் வடசென்னை கதாபாத்திரங்கள்.

 

#image_title

ஆடுகளம் படத்தில் வரும் குரு சிஷ்யன் உறவு வடசென்னை கதையில் உள்ளதுதான். அதேபோல விசாரணை படத்தில் வரும் என்கவுண்ட்டர் எல்லாம் வடசென்னை கதையில் உள்ளதுதான்” எனக் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு கதையை இன்னும் இரண்டு பாகங்கள் வெற்றிமாறன் எடுப்பாரா மாட்டாரா என்பது இப்போதுவரைக் கேள்விக்குறியாக உள்ளது.