owl

ஆந்தையின் படத்தை வீட்டில் வைத்தால் நல்லது நடக்குமா…? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன…?

By admin on ஐப்பசி 23, 2024

Spread the love

ந்து மதத்தின் படி ஒருவர் வீடு கட்ட போகிறார்கள் என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரம் பார்த்து தான் காட்டுவார்கள். அதற்கென்று தனியாக ஒரு புத்தகமே இருக்கிறது. சமையலறை இங்குதான் இருக்க வேண்டும். பூஜை அறை இங்குதான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு திசைக்கு ஏற்ப அதன் தன்மைக்கு ஏற்ப வாஸ்து சாஸ்திரத்தை குறித்து வைத்திருக்கிறார்கள். அந்த வாஸ்து அம்சத்தின் படி வீட்டை கட்டும் பொழுது அது நமக்கு சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று தரும் என்பது நம்பிக்கை. இது மட்டுமில்லாமல் பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று தான் ஆந்தை உருவப்படத்தை வீட்டில் வைக்கலாமா கூடாதா என்பது அதைப் பற்றி இனி காண்போம்.

   

வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு பொருட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதில் ஒன்றுதான் ஆந்தை உருவப்படம் அல்லது சிலை. ஆந்தையை பார்த்தால் பலரும் பயப்படுவார்கள். ஏனென்றால் அது பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும். ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை, அதிர்ஷ்டமாக கருதப்படுவது.

   

ஆந்தை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வாகனமாக கூறப்படுகிறது. ஆந்தைக்கு முன்கூட்டியே நடக்கப்போகும் நல்லது கெட்டது அறியும் தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் கண்ணில் ஆந்தை தென்பட்டு விட்டால் அவர் ஏராளமான பணத்தை பெற்று பணக்காரராக போகிறார் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

 

அதேபோல் வீட்டில் ஆந்தை படம் அல்லது சிலையை வைக்கும் போது வீட்டில் எதிர்மறை சக்திகள் வீட்டை விட்டு வெளியேறி நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. படத்தை விட சிலையாக அதுவும் பித்தளை சிலையாக வாங்கி வைத்தால் மிகவும் நல்லது. ஆந்தை சிலையை உங்கள் வீட்டு வாசலை பார்த்து இருக்குமாறு வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது நம் வீட்டில் வரும் திருஷ்டியை அது பார்த்ததும் விரட்டி அடிக்கப்படும் என்பது நம்பிக்கை.

வீட்டில் மட்டுமல்ல உங்களது அலுவலகங்களிலும் ஆந்தை சிலையை வாங்கி வைக்கலாம். வடமேற்கு திசையிலும் இந்த ஆந்தை சிலைகளை வைக்கலாம். நீங்கள் ஆந்தை சிலையை வாங்கப் போகிறீர்கள் என்றால் வெள்ளிக்கிழமையை பார்த்து நல்ல நேரம் பார்த்து வாங்கி கொண்டு வந்து வீட்டில் வையுங்கள். இது உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி உங்களை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.