சில்க் ஸ்மிதா தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான புகழின் உச்சியில் இருந்த நடிகை ஆவார். ஆந்திர பிரதேசம் எல்லூரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது பற்று கொண்ட சில்க் ஸ்மிதா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த வினு சக்கரவர்த்தி சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

1979 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சில்க் அந்த பெயரை தனது பெயருக்கு முன்னால் சில்க் என்று வைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சில்க் ஸ்மிதா. 1980களில் அனைத்து படங்களிலும் நடன கலைஞர் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா.
அவரது வசீகரிக்கும் கண்களும் உடல் நளினமும் அபாரமான நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. இவருடன் நடிப்பதற்கு நடிகர்களும் இவரை வைத்து படம் இயக்குவதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வந்தனர். மக்களும் சில்க் ஸ்மிதாவை அவ்வளவு ரசித்தனர். ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா.
சில்க் ஸ்மிதா ஒரு படத்தில் நடிக்க முடியாமல் போனாலும் ஒரு பாட்டிலாவது அந்த படத்தில் தோன்றி விட வேண்டும் என்று விருப்பப்பட்டனர் இயக்குனர்கள். அப்படி ஒரு பாட்டில் சிலக் ஸ்மிதா தோன்றினாலும் அந்த படம் ஹிட்டு தான் என்ற அளவுக்கு பெயர் பெற்றிருந்தார் சில்க் ஸ்மிதா. இவருடன் பழகிய ஒரு பிரபலமான நடிகை சில்க் ஸ்மிதாவின் படுக்கையை பார்த்து பயந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

அந்த பிரபலமான நடிகை டிஸ்கோ சாந்தி தான். 1980களில் படங்களில் நடனம் ஆடுபவர் டிஸ்கோ சாந்தி. அவர் சில்க் ஸ்மிதா பற்றி கூறுகையில் சில்க் ஸ்மிதா என்னிடம் ரொம்ப நல்லா பழகுவாங்க. நானும் அக்கா தான் கூப்பிடுவேன் அவங்களோட ரொம்ப பாசமா இருப்பேன். அந்த காலத்துல ரொம்ப பிசியா நடிச்சிட்டு இருந்தாங்க சில்க் ஸ்மிதா. அந்த நேரத்திலேயே ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சம் வரைக்கும் சம்பளம் வாங்கி நடிச்சுட்டு இருந்தாங்க. அப்போ அவங்க வீட்டுக்கு ஒரு நாள் போகும்போது அவங்க படுக்கை அறையில் பெட் ஃபுல்லா பணம் கட்ட அடுக்கி வச்சு அதுக்கு மேல படுத்தாங்க. நான் பார்த்து பயந்துட்டேன் என்னக்கா இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு ஒரு காலத்துல நான் சான்ஸ் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போ எனக்கு எல்லாம் இருக்குது அதனால நான் பெட்டு புல்லா பணத்தை பரப்பி வச்சு படுத்து இருக்கேன் அப்படின்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க என்று நினைவுகளை பயந்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி.
