சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. தொடர்ந்து வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவ்வாறு சீரியல்களில் நடித்துக் கொண்டே தன்னுடைய கல்லூரி படிப்பையும் முடித்தார். இதனைத் தொடர்ந்து தனது 2002 ஆம் ஆண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலர் அரவிந்தை திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதியின் கணவர் ஒரு பாடி பில்டர்.

தன்னுடைய பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், ஸ்ருதியை திருமணம் செய்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் அவர் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக திருமணமான ஒரே வருடத்தில் அவர் உயிரிழந்ததை ஸ்ருதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். அதன் பிறகு அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியில் வந்து தற்போது மீண்டும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மறைந்த தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
