திருந்தாத கார் டிரைவர்… MGR கொடுத்த வினோத தண்டனை…

By admin on ஐப்பசி 16, 2024

Spread the love

தமிழ்நாட்டில் தன்னிகரற்ற தலைவராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ராஜ்யத்தையும் உருவாக்கியவர் MGR. மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அவரைப் போல் ஒரு மனிதர் இல்லை என்று கூறுவது போல் இந்த உலகில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் MGR.

   

குடும்ப வறுமைக்காக சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த MGR நாடகத்தில் இணைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பின்னர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து மிகுந்த போராட்டத்திற்கு பிறகு நடிகராக தமிழ் சினிமாவில் உயர்ந்தவர் MGR. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனக்கு என ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி ரசிகர்களை பெற்றவர் MGR.

   

MGRரின் படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் அதிகமாக இருக்கும். அதனால் மக்கள் இவரை ரசித்தனர். மக்கள் பணி செய்ய வேண்டும் என்று நடிக்கும் போதே அரசியல் பணிகளில் ஈடுபட்டுவர் MGR. பின்னர் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார். தான் இறக்கும் வரையிலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆக சிறப்பாக பணியாற்றியவர் MGR.

 

மக்களின் நலனுக்காக பல திட்டங்களை வகுத்தவர் MGR. வாரி கொடுக்கும் வள்ளலாகவும் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாகவும் இருந்த எம்.ஜி.ஆருக்கு கோபமும் அந்த அளவுக்கு அதிகமாக வருமாம். அப்படி அவர் கோபப்பட்டு தனது கார் டிரைவருக்கு ஒரு தண்டனை கொடுத்து இருக்கிறார். அது என்னவென்று இனி காண்போம்.

MGRக்கு உடம்பு சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சைக்காக சென்ற போது அவர் மீது அதிக அன்பு வைத்திருந்த கார் டிரைவர் குடிப்பழத்துக்கு அடிமையாகி இருந்திருக்கிறார். MGR உடல்நலம் சரியாகி திரும்பி வந்தும் கூட அவர் குடியை நிறுத்தவில்லை. அப்போது காரில் செல்லும் போது டிரைவரிடம் இருந்து மது வாசனை வந்திருக்கிறது. உடனே காரை நிப்பாட்ட சொல்லி எம்ஜிஆர் எதற்காக இப்படி குடிக்கிற என்று கேட்கும் போது டிரைவர் உங்களுக்காக தான் இப்படி குடிக்க ஆரம்பிச்சிட்டேன் என்று கூறியிருக்கிறார். நான்தான் இப்ப சரியாகி வந்துட்டேனே ஆனாலும் நீ குடிய நிப்பாட்டாம நீ அதுக்கு அடிமையாகிட்ட இனிமேல் என் முகத்திலேயே முழிக்காத அப்படின்னு சொல்லி அனுப்பி இருக்கிறார் எம்ஜிஆர். என்ன தான் கோபப்பட்டு டிரைவரை அனுப்பினாலும் இறுதி வரை அந்த டிரைவரின் குடும்பத்திற்கு எல்லா சௌகரியத்தையும் செய்து பண உதவியும் செய்திருக்கிறார் கலியுக கர்ணன் எம்ஜிஆர்.