தலை சுற்றல் பலருக்கு வரும் போகும். இது சாதாரண விஷயம் தான் என்று பலர் நினைத்துக் கொள்வார்கள். சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதாலோ தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலோ அதிகமாக வேலை செய்வதாலோ தலை சுற்றல் வருவது இயற்கையானது என்று நினைக்கிறார்கள். ஆனால் இது சாதாரண விஷயம் கிடையாது. அடிக்கடி தலை சுற்றலை சந்திக்கிறீர்கள் என்றால் அது பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். தலை சுற்றலுக்கும் உடல் நலனுக்கும் என்ன சம்பந்தம் என்பதை பற்றி இனி காண்போம்.

தலை சுற்றல் 30 வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 பேரில் 10 பேருக்கு அதிகமாக இருக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான் தலை சுற்றல் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. தலை சுற்றல் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும் பல நோய்களுக்கு அறிகுறியாக உடல் நமக்கு காட்டுகிறது என்பதுதான் உண்மை.
தலை சுற்றல் அடிக்கடி ஏற்படும் போது முதலில் காது சார்ந்த ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று நீங்கள் பார்க்க வேண்டும். காது சார்ந்த பிரச்சினை ஏற்படும் போது உடனடியாக தலை சுற்றல் ஏற்படும். ரத்தம் சீராக உடம்பில் செல்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பிளட் பிரஷர் இருக்கும்போதும் தலை சுற்றல் ஏற்படும்.

இதய நோயின் அறிகுறியாக தலை சுற்றல் ஏற்படலாம். ரத்த சோகை மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கும் தலை சுற்றல் ஏற்படும். இதனால் அடிக்கடி உங்களுக்கு தலை சுற்றல் ஏற்படுவது போல் இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சென்று பார்த்து ஆலோசித்துக் கொள்ளுங்கள்.
