10 மாசத்துல 50 பாட்டுக்கு இசையமைக்க சலிக்குற அனிருத் எங்க?.. ஒரே வருஷத்துல 54 படங்களுக்கு இசையமைச்ச ராஜா எங்க?- எடுத்து பாரு தலைவன் ரெக்கார்ட்!

By vinoth on ஐப்பசி 14, 2024

Spread the love

சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை  விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

   

#image_title

   

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அவருக்குக் கொஞ்சம் ஓய்வைக் கொடுத்தது என்று சொல்லலாம். ஆனாலும் இப்போது வரை அவர் பிஸியான இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்.

 

அவரின் பல சாதனைகள் இப்போதுதான் வெளியில் தெரிந்து நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் அனிருத் அளித்த ஒரு பேட்டியில் “அடுத்த 10 மாதங்களில் நான் ஐம்பது பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும். அதை நினைத்தால் இப்போதே என் தலை வலிக்கிறது” எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இளையராஜா ரசிகர்கள் இதற்கு சிறப்பான பதில் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

#image_title

1984 ஆம் ஆண்டு மட்டும் இளையராஜா 54 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு படத்தில் 5 பாடல்கள் என்றால் கூட 250 பாடல்களுக்கு மேல். அது இல்லாமல் பின்னணி இசைப் பணிகள் வேறு.  இதையெல்லாம் ஒரு மனிதர் எப்படி செய்திருக்க முடியும் என்பது ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.