நாங்கள் பிரிந்து விட்டோமா..? பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்… நடிகர் ரஞ்சித்தின் மனைவி ஓபன் டாக்..!!

By admin on ஐப்பசி 13, 2024

Spread the love

நடிகர் ரஞ்சித் சிந்துநதி பூவே திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர் 40 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். ஒரு சில படங்களை ரஞ்சித் இயக்கியும் இருக்கிறார். நேசம் புதிது திரைப்படத்தில் ரஞ்சித் பிரியா ராமருடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்தனர். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதன்பிறகு நடிகை ராதா சுதாவை ரஞ்சித் திருமணம் செய்தார்.

   

அந்த வாழ்க்கையும் சரியாக அமையாததால் ரஞ்சித் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். சில மாதங்கள் கழித்து ரஞ்சித் மீண்டும் தனது முதல் மனைவியுடன் இணைந்து விட்டார். இருவரும் தங்களது உண்மையான காதலை புரிந்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். பல்வேறு திரைப்படங்களில் பிரியா ராமன் கதாநாயகியாகவும் குணசேகர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சீரியலிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரஞ்சித் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரியா ராமன் பங்கேற்கவில்லை. அதனால் இருவரும் மீண்டும் பிரிந்து விட்டார்களா என செய்திகள் வலம் வந்தது.

   

 

இந்த நிலையில் பிரியா ராமன் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கடைசி நேரத்தில் தான் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் நாங்கள் எடுத்த முடிவு தான் அது. எங்களுக்கு நெருக்கமான ஒரு இளம் ஜோடிகளுக்கு எங்களால் நல்லது நடக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. இருவரில் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். எங்களை நம்பி இளம் ஜோடி இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு யாரும் கிடையாது. ஒரு நல்லது நடக்கும் போது அந்த இடத்தில் நாங்கள் இருவரும் இருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டார்கள்.

#image_title

நாங்கள் வாக்கு கொடுத்து விட்டோம். அதே நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என நினைக்கவில்லை. இதனால் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து விட்டார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் நான் அந்த ஜோடிகளுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொடுத்தேன். ரஞ்சித் மிகவும் இளகிய மனதுக்காரர். வெளியிலே அவர் எப்படி இருக்கிறாரோ அதேபோல் தான் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கிறார். எந்த இடத்திலும் அவர் நடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சில வருடங்கள் கழித்து அவரிடம் பேசினாலும் அதே போலத்தான் பேசுவார். அப்போது அவர் உண்மையாக இருக்கிறார் என புரிந்து கொள்வார்கள் என தனது கணவரை சப்போர்ட் செய்து பிரியா ராமன் பேசியுள்ளார்.