ஒடிசாவை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ரிஷிதா. இவர் மாணவர் மற்றும் அல்ல சிறுவயதிலிருந்து தன்னார்வலர் தொண்டுகளை செய்து வருபவர். ஒடிசாவின் இளைய கிராண்ட் மாஸ்டர் மற்றும் மிகக்குறுகிய நேரத்தில் அதிகபட்சமாக ரூபிக்ஸ் தீர்த்தவர். இந்த இளம் வயதிலேயே காமிக்கோ கிருட்சேட்ஸ் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார் ரிஷிதா.

மேலும் இஸ்ரோ ப்ராஜெக்ட் மேக்கிங் போட்டியில் தகுதி பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார் ரிஷிதா. பார்வையற்றவர்களுக்கு ஆடியோ பாட புத்தகங்களாக வழங்கும் ஆடியோ புத்தகமான Hear2Read ஐ வழங்கியிருக்கிறார். முதியோர் இல்லங்கள் மாற்றுத்திறனாளி இல்லங்கள் போன்றவருக்கு ரிஷிதா தன்னார்வலர் பணிகளை செய்து வருக்கிறார். எப்போதும் மனிதர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமாக இருப்பார் ரிஷிதா.
ரிஷிதா வீட்டு உதவியாளரின் மகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த செய்தியை கேட்ட ரிஷிதா என்ன காரணம் என்று கேட்டிருந்தார். அப்போது கிராமப்புறத்திற்கு அவர் பேருதில் பயணம் செய்யும்போது பள்ளங்களில் பேருந்து ஏறி இறங்கியதால் கருச்சிதைவு ஏற்பட்டது என்று கூறியிருக்கின்றனர். இதை தீர்ப்பதற்கு அதாவது பேருந்தில் கர்ப்பிணிகள் வயது உயர்ந்தோர் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு சௌகரியமான இலகுவான பயணத்தை வழங்க என்ன செய்வது என்று யோசித்தார்.
அவர்களுக்கு இலகுவான பயணத்தை வழங்குவதற்கு பேருந்து ஓட்டுனரும் நடத்தினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆனால் அவர்கள் பணி செய்யும் போது இப்படிப்பட்ட கற்பிணிகளோ வயதானவர்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்படி கண்டுபிடிக்க முடியும் யார் அவர்களுக்கு கூறுவது என்று யோசிக்கும் பொழுது அதற்கான ஒரு பயமெட்ரிக் சாதனத்தை உருவாக்கினார் ரிஷிதா. இந்த பயோமெட்ரிக் சாதனம் அவர்களை அடையாளம் கண்டு டிரைவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார் ரிஷிதா.

இதன் மூலம் வயதானவர் மாற்றுத்திறனாளிகள் ஆகியவருக்கு காயம் ஏற்படாமல் இருக்கவும் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் உதவும். அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக சீட் ரிசர்வ் செய்வது போன்றவைகளை முன்கூட்டியே தெரியப்படுத்தும் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கையை அனுப்பும்.
இந்த சாதனத்தை உருவாக்குவதற்கு 4000 செலவழியும் என்று கூறிய ரிஷிதா தற்போது 2000 ரூபாய் செலவில் அதை உருவாக்கலாம் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்து இருக்கிறார். இந்த கண்டுபிடிப்புக்காக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இக்னைட் மைண்ட் இன்னோவேஷன் அண்ட் கிரியேட்டிவிட்டி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இளம் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஒடிசாவில் திகழ்கிறார் ரிஷிதா.
