பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, பார்ட்டி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.

கடைசியாக தளபதி விஜயை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போடுகிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது டென்ஷனா இருக்கும்போது நீங்க சும்மா கேஷுவலா பேசினாலே ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சில பேர் சொல்லுவாங்க.
நான் எப்பவும் ஜாலியா பேசிட்டு இருப்பேன். சென்னை 28 படம் எடுக்கும்போது அவசரமா ஒரு சீன் எடுக்க வேண்டி இருந்துச்சு. அப்போ ஜெய் ஒரு ஓரமா நின்னு செல்போன் பேசிட்டு இருந்தாரு. நான் நீ என்ன போன் பேசிட்டு இருக்க? சீக்கிரம் வா அப்படின்னு சொன்னேன். சூட்டிங் எடுத்து முடிச்சிட்டோம். அதுக்கப்புறம் பிரேம்ஜி என்கிட்ட வந்து நீ ஏன் அவரை திட்டுன? அவர் அழுதுட்டாரு அப்படின்னு சொன்னான்.

அவருக்கு கன்னத்துல ஏதோ அடிப்பட்டு இருக்கு. அதனால அவர் சரி பண்ணிட்டு இருந்திருக்கிறாராரு. நான் போன் பேசுறாருண்ணு நினைச்சுட்டு கொஞ்சம் சவுண்டா வாங்கன்னு கூப்பிட்டேன் அவ்வளவுதான். அவர நான் திட்டவில்லை. அதுக்கப்புறம் ஜெய்யை கூப்டு பேசும்போது நீங்க சத்தமா பேசும் போது கஷ்டமாயிருச்சுன்னு சொன்னாரு என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
