தமிழ் சினிமாவிற்கு சிறப்பான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஞானவேல் ரஜினிகாந்தை வைத்து தற்போது வேட்டையன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரானா ரகுபதி மற்றும் மஞ்சுவாரியார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படம் இன்று அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படம் அதிகளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வருடம் நடைபெற்ற நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பிரீ புக்கிங் கடந்த மாதமே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அமிதாப்பச்சன் பற்றி பேசியுள்ள ஞானவேல், அமிதாப் பச்சன் சாருக்கு நிறைய உடல்நல பிரச்சனை இருக்கு. சூட்டிங் வந்த பிறகு கூட இடையில் மருத்துவர்கள் வந்து செல்வார்கள் அதே சமயம் அவர் மாத்திரை எடுத்துக் கொள்வார். ஆனால் திரையில் எதையுமே அவர் காட்டிக் கொள்ள மாட்டார்.

எப்போதும் தன்னுடைய வேலையில் கவனமாக இருப்பார். அடிக்கடி கேரவனுக்கு செல்ல மாட்டார். சூட்டிங் வந்த பிறகு சாப்பாட்டுக்கு மட்டுமே அந்த இடத்தை விட்டு நகருவார். ஒருமுறை நானே அவரிடம் கேட்டேன், சார் இந்த வயசுலயும் நடிக்கணும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கேன் எதற்கு நீங்க பயப்படலையா என்று கேட்டேன். ஒரு விஷயத்துக்கு மட்டும் தான் எனக்கு பயமா இருக்கு எங்க என்ன டைரக்டர் படம் நடிக்க கூப்பிடாம போயிருவாங்கன்னு தான் கவலையா இருக்கு என்று கூறி அங்கிருந்து நகர்ந்து சென்றார் என அமிதாப்பச்சன் நடிப்பு பற்றி ஞானவேல் வியப்பாக பேசி உள்ளார்.
