என்றும் இளமையாக இருக்க வேண்டுமா…? சிறப்பான டிப்ஸ் இதோ…

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, எல்லோரும் வயதான தோற்றத்தை பெற விரும்ப மாட்டார்கள். எல்லோரும் இளமையாகவே இருப்பதற்கு விரும்புவார்கள். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையினால் சிறிய வயதிலேயே வயதான தோற்றத்தை கொண்டோர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றத்தையும் உணவு பழக்கவழக்கங்களையும் நாம் மாற்றிக் கொண்டாலே இளமையான தோற்றத்தை பெற முடியும். அது எப்படி என்பதை இனி காண்போம்.

   

என்றுமே இளமையாக இருக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது முகத்தை கழுவ வேண்டும். அதிக வேர்வை வரும்போது சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும் அழகு சாதன பொருட்களை உபயோகப்படுத்தாமல் தவிர்த்து விடுங்கள். மதிய சூரிய வெளிச்சத்தில் நேராக முகத்தை காட்டாதீர்கள்.

   

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருக்கிறது. இது போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது சருமம் ஆரோக்கியம் மேம்பட்டு இளமையாக இருப்பதற்கு உதவும். சருமம் பளபளவென்று மின்ன கீரைகள் மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் சருமம் நெகிழ்வு தன்மையை பெற்று சுருக்கங்கள் மற்றும் வயது முதிர்வுக்கான அறிகுறியை வராமல் தடுக்கிறது.

 

என்றும் இளமையாக இருக்க தினமும் குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். எலும்பு சூப் போன்ற உணவுகள் sarumathiruku தேவையான Collagen உற்பத்தியை அதிகரிக்கின்றன. அது இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆலிவ் ஆயிலில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கின்றன. இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

காலா, மத்தி, சூரை போன்ற மீன் வகைகளில் Omega 3 நிறைந்திருக்கின்றன. இந்த மீன் வகைகள் சாப்பிடுவது சரும பாதுகாப்பிற்கு முக்கியமானது. இதற்கும் மேலாக முக்கியமாக தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நீர்ச்சத்து நன்றாக இருந்தால் தோல் சுருக்கம் ஏற்படாது. மன அழுத்தம் இருந்தாலும் இளமையான தோற்றம் போய் முதுமை வரும். அதனால் மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்யுங்கள். சைக்கிளிங், நடனம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் போது உடல் ஆரோக்கியத்தோடு சருமம் ஆரோக்கியமும் மேம்படும்.

ஒருவருக்கும் வயது முதிர்வு என்பது தடுக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனாலும் அதை நம்மால் கொஞ்சம் தள்ளி போட முடியும். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை உடற்பயிற்சி ஊட்டச்சத்தான உணவுகள் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் இளமையான தோற்றத்தை நம்மால் பெற முடியும் என்பது சாத்தியமான ஒன்றுதான்.