கோயம்புத்தூரில் ஆரம்பித்து சர்வதேச அளவில் பிஸினஸ்… ரூ. 1200 கோடி டேர்ன் ஓவர் செய்யும் Walkaroo…

By admin on ஐப்பசி 7, 2024

Spread the love

ஒரு சுய தொழிலை தொடங்குவதற்கு பணத்தை தவிர மூலாதனமாக பார்க்கப்படுவது நம்பிக்கை விடாமுயற்சி துணிச்சல் ஆகியவை ஆகும். இது தவிர தூங்க விடாத லட்சியமும் உங்களை பிசினஸில் சாதிக்க தூண்டும். அப்படி சிறுவயதிலிருந்தே வளர்ந்த பின்பு நான் தொழில் தான் செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்து இன்று ஒரு பிராண்டை உருவாக்கி அதில் வெற்றி கண்டு இருக்கிறார் வி கே சி நவ்ஷத். அவரைப் பற்றி இனி காண்போம்.

   

காலணிகள் எல்லோருக்கும் பொதுவான அத்தியாவசிய பொருள். பேட்டாவுக்கு அடுத்ததாக இன்று இந்தியாவில் அதிகம் இருக்கக்கூடிய பிராண்ட் வி கே சி Walkaroo ஆகும். கோயம்புத்தூரில் 2013 ஆம் ஆண்டு வி கே சி நவுஷாத்தால் துவங்கப்பட்டது தான் Walkaroo. ஆண்கள் பெண்கள் மற்றம் குழந்தைகளின் காலணிகளை தரத்தில் நம்பர் ஒன் ஆகவும் விலை குறைவாகவும் வழங்கி வருகிறது. இவரது தந்தை தான் விகேசி முகமது கோயா வி கே சி பிராண்ட் காலணிகளை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

   

எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் என்று கேட்கும் போதெல்லாம் சிறுவயதில் இருந்தே வி கே சி நவ்ஷத் பிசினஸை தவிர வேறு ஏதும் அவர் கூறியதில்லை. தனது வி கே சி பிரைடின் குடும்ப தொழிலை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று Walkaroo என்ற புது பிரண்டை துவக்கினார் வி கே சி நவ்ஷத். திருச்சூரில் பொறியியல் கல்லூரி படிப்பையும் பி டெக் படிப்பையும் படித்து முடித்த விகேசி நவ்ஷத் ரப்பர் ஆய்வு நிலையத்தில் பயிற்சி பெற்றார்.

 

தான் கொண்ட அனுபவத்தை எல்லாம் வைத்து Walkarooவை தொடங்கினார். தமிழ்நாடு கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் 12 ஆலைகளில் காலணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த ஆலைகளில் தினமும் 4 லட்சம் ஷூக்கள் மற்றும் காலணிகள் உற்பத்தி செய்து வருகிறது வி கே சி நவ்ஷத் குழுமம். இந்தியாவின் ஆறு மாநிலங்களில் 20 உற்பத்தி ஆலயங்களில் 7000 பேருக்கு மேல் ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள்.

வாடிக்கையாளர்களின் விருப்பம் ட்ரெண்ட் மற்றும் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை புரிந்து கொண்டு விகேசி நவ்ஷத் செயல்படுகிறார். தரம், விலை மற்றும் ஃபேஷனையும் ஒன்று சேர்த்து Walkarooவை சிறந்த முறையில் விற்பனை செய்து வருகிறார் வி கே சி நவ்ஷத். இந்த நிறுவனம் நாடு முழுவதும் 200 டீலர்களுடன் ஒன்றரை லட்சம் சில்லறை விற்பனையாளர்களுடன் செயல்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் மிகப்பெரிய சந்தையை கொண்டிருக்கிறது Walkaroo. தற்போது ஆண்டுக்கு 1200 கோடி வரை டேர்ன் ஓவர் செய்து வருகிறது. அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போலவே உண்மையான கனவு லட்சியம் உங்களை தூங்கவிடாமல் செய்யும் என்பதை நாம் சரியாக எடுத்துக் கொண்டு சரியான திட்டமிடலோடு பயணித்தால் நம்மாலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் வி கே சி நவ்ஷத்.