Black Forest, Red Velvet கேக் பிரியர்களா நீங்கள்…? வெளிவந்த பகீர் தகவல்…

By admin on ஐப்பசி 5, 2024

Spread the love

இனிப்புகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான ருசிகளில் ஸ்வீட்டுகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்வர். எந்த ஒரு பண்டிகை என்றாலும் இனிப்பு தான் முதலில் வாங்குவோம். இதில் கேக்குகளும் அடங்கும். தற்போது கேக்குகளின் மவுசு அதிகரித்து இருக்கிறது. அதற்கு காரணம் பல வெரைட்டியில் பல வண்ணங்களில் Black Forest கேக் Red Velvet ப்ளூபெர்ரி போன்று கண்ணை கவரும் வண்ணங்களில் இருப்பது தான்.

   

தற்போது மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் கேக்குகளில் முதலிடத்தில் இருப்பது Black Forest மற்றும் Red Velvet கேக். இந்த கேக்குகளால் உடலுக்கு எவ்வளவு தீங்கு என்பது பற்றிய ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கர்நாடகா முழுவதும் உள்ள பேக்கரியில் இருந்து சேகரிக்கப்பட்ட கேக் மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

   

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் பிளாக் பாரஸ்ட் மற்றும் ரெட் வெல்வெட் கேக் மாதிரிகளை எடுத்து சோதித்த போது அங்கீகரிக்கப்படாத கேக்குக்கு வண்ணம் கொடுக்க உபயோகப்படுத்தப்படும் ரசாயனங்கள் பயன்படுத்த பட்டிருப்பதாக கண்டறிந்து இருக்கின்றனர். இந்த மாதிரிகள் கொண்ட கேக்குகளில் டெக்கான் ஹெரால்ட் எனும் வண்ணமயமாக்கும் ரசாயனம் இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

 

இந்த ரசாயனம் கலந்த செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட கேக்குகளை சாப்பிடும் போது நமக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மட்டுமில்லாமல் ஆஸ்துமா போன்ற பல உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்த கூடும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றனர். இந்த செய்தி கேக்கு பிரியர்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.