1000 கோடி வசூல் படைத்த படத்தில் நடித்த பிரபல நடிகர்… உடல்நல பின்னடைவால் வாய்ப்புகளை இழந்த சோகம்…

By admin on ஐப்பசி 5, 2024

Spread the love

தற்போதைய காலகட்டத்தில் வெளிவரும் படங்கள் 100 கோடி 200 கோடி வசூலை தாண்டுவதற்கே சற்று சிரமப்படுகிறது. ஆனால் ஒரு படம் வெளிவந்த சமயத்தில் அசால்ட்டாக உலக அளவில் ஆயிரம் கோடி வசூலை பெற்று இன்றளவும் சாதனையில் முதலிடத்தில் இருக்கிறது. அதை வேற எந்த படத்தாலும் முறியடிக்க முடியவில்லை. அதுதான் பாகுபலி 2 த திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி உடல்நலம் சரியில்லாமல் போனதால் வாய்ப்புகளை இழந்த ஒரு நடிகரைப் பற்றி பார்ப்போம்.

   

பாகுபலி திரைப்படம் ப மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி மாபெரும் வரலாற்று சாதனை படைத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் பிரபாஸ் அனுஷ்கா தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் வில்லன் வேத்தில் நாசர், ராணா டக்குபதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்து பிரபலத்தின் உச்சிக்கு சென்று பின்னர் உடல் நலம் குன்றியதால் வாய்ப்புகளை இழந்தவர் தான் ராணா டக்குபதி.

   

1000 கோடி பட கிளப்பில் ஷாருக்கான் சல்மான்கான் ரன்பீர் கபூர் ரஜினிகாந்த் அக்ஷய்குமார் அவர்களையும் தாண்டி ராணா டக்குபதி இடம் பிடித்தார். இவ்வளவு பெரிய சாதனை படைத்த படத்தில் நடித்த போதும் அதற்கு அடுத்ததாக ரானா டக்குதி குறைந்த பட்ஜெட் படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் காடன், 1945 ஹவுஸ்ஃபுல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனதற்கு காரணம் அவருடைய உடல் நலம் குன்றியது தான்.

 

ராணா டக்குபதிக்கு ஏற்கனவே ஒரு கண் பார்வை தான் உண்டு. இன்னொரு கண் தெரியாது என்று அவரே வெளிப்படையாக கூறி இருப்பார். இது தவிர அவருக்கு தீவிர சிறுநீரக கோளாறு இருந்து மரணத்தின் வாயிலுக்கு வரையும் செய்து உயிர் பிழைத்து இருக்கிறார். ராணா டக்குபதிக்கு கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்டது. அது அவரை உடல் எடையை குறைக்க செய்தது. இதனால் சினிமாவில் இருந்து ஓய்விற்காக விலகி இருந்தார் ராணா டக்குபதி.

தீவிர சிகிச்சையில் இருந்து தற்போது வெளிவந்திருக்கும் ராணா டக்குபதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவருக்கும் வேட்டையின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ருக்கிறார். தன் விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையால் உடல்நலம் குன்றியபோதும் சினிமாவில் வளர்ந்து வருகிறார் ராணாக்குபதி.