தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணம் என்று சொல்லப்பட்டவர்கள் நடிகர் விஜயகாந்தும், தயாரிப்பாளர் ராவுத்தரும். அந்த அளவுக்கு இருவரும் நகமும் சதையுமாக இருந்தார்கள். விஜயகாந்தின் வளர்ச்சியில் ராவுத்தருகும் பெரும்பங்கு உண்டு என்பது அவர்களை பற்றி தெரிந்தவர்கள் எல்லோரும் சொல்வது.
மதுரையில் இருவரும் சிறுவர்களாக இந்த பால்ய வயதிலேயே நண்பர்களாக இருந்தவர்கள். மதுரையில் சினிமா பார்ப்பதும்தான் இருவருக்கும் இருந்த முக்கிய பொழுதுபோக்கு. வாலிபராக வளர்ந்து நின்ற விஜயராஜை பார்த்து, (சினிமாவுக்கு வரும் முன் அவரது பெயர் விஜயராஜ்தான்) விஜி, நீ சினிமாவில் நடி என்று சினிமா நடிகராகும் ஆசையை கேப்டனுக்கு தூண்டிவிட்டதே அவரது நண்பர் இப்ராகிம் ராவுத்தர்தான். அவரை ஒரு மாஸ் ஹீரோவாக உருவாக்கி அழகுப்பார்த்தார் ராவுத்தர். அவருக்குள் அரசியல் ஆசையைத் தூண்டிவிட்டதும் ராவுத்தர்தான்.

விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர்
ஆனால் இவர்கள் நட்பு விஜயகாந்த் திருமணத்துக்குப் பின்னர் விரிசல் விழ ஆரம்பித்து விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது இருவரும் நிரந்தரமாக பிரிந்தனர். அதன்பின்னர் சினிமா வாழ்க்கையும் வீழ்ச்சியை நோக்கி சென்றது. ராவுத்தரும் அதன் பின்னர் பெரிதாக ஜொலிக்கவில்லை.
எப்படி விஜயகாந்த் ராவுத்தர் நட்பு பேசப்பட்டதோ அப்படி ஒரு நட்பாகதான் இருந்தது அஜித், எஸ் எஸ் சக்ரவர்த்தி நட்பு. அந்தளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இன்றைக்கு வரைக்கும் அஜித்தை வைத்து அதிக படங்கள் தயாரித்தது என்றால் அவரின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான்.

அஜித் மற்றும் எஸ் எஸ் சக்ரவர்த்தி
அஜித்தை வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயா, ஜி மற்றும் வரலாறு என 9 படங்களைத் தயாரித்துள்ளார். அவ்வளவு நெருக்கமாக இருந்த இவர்கள் நட்பு கடைசியாக இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பண்ணிய படங்கள் ப்ளாப் ஆனதால் பிரிந்தது. அதற்குப் பின்னர் அஜித் அவரை சந்திக்கவே இல்லை என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் சக்ரவர்த்தி மறைந்தபோது கூட அவரது உடலை அஜித் சென்று பார்க்கவேயில்லை. அப்படி என்ன அஜித்துக்கு சக்ரவர்த்தி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை.
