நீங்க அத பண்ணவே கூடாது.. விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்..!!

By admin on ஐப்பசி 4, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இப்போது பிக் பாஸ் சீசன் 8 தொடங்க உள்ளது. கடந்த சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

   

ஆனால் இந்த சீசனில் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. சில தனிப்பட்ட காரணங்களால் கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.  நயன்தாரா, விஜய் சேதுபதி, சிம்பு, சரத்குமார் என பல பிரபலங்களின் பெயர்கள் தொகுப்பாளர் பட்டியலில் இடம் பெற்றது.

   

Actor Vijay Sethupathi

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என புரமோ உடன் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் தரப்பில் இருந்து விஜய் சேதுபதிக்கு ஒரு கண்டிஷன் போட்டு உள்ளார்களாம்.அது என்னவென்றால் பொதுவாகவே விஜய் சேதுபதி ஒரு சிறிய படமாக இருந்தாலும் உதவி செய்யும் நோக்கத்தோடு பிரமோஷன் பணிகளில் ஈடுபடுவார். பிக் பாஸ் தரப்பில் முதல் கண்டிஷனாக நிகழ்ச்சி முடியும் வரை எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என கூறியுள்ளனர். அதற்கு விஜய் சேதுபதி சம்மதித்ததாக தெரிகிறது.