தமிழ் சினிமா மறக்க முடியாத நாயகன் MGR .மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. இவருக்கு இருந்தது போல் எந்த நடிகருக்கும் அத்தனை கோடி கணக்கில் ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தவர் MGR .

குடும்ப வறுமைக்காக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் துணை நடிகராக நடித்து பத்து வருட போராட்டத்திற்கு பின்பு நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி MGR போல் இன்னொருத்தர் இல்லை என்பது போல் பேரை சம்பாதித்தவர் MGR. 1950 60 70களில் புகழின் உச்சியில் இருந்தார் MGR. சிவாஜி கணேசன் MGR ஜெமினி கணேசன் ஆகிய மூவரையும் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று அழைப்பர்.
தன்னை வாழ வைத்த தமிழக மக்களின் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் MGR. நடிகராக மட்டுமல்லாமல் அரசியலில் ஈடுபாடு கொண்டு தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர் MGR. தான் இறக்கும் வரையில் முதலமைச்சராக பதவி வகித்தவர் MGR. அவர் மக்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதற்கு அவர் படத்தில் நடிக்கும் போதே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
1966 ஆம் ஆண்டு MGR ஜெயலலிதா நம்பியார் எம் ஆர் ராதா நடித்து வெளியான திரைப்படம் சந்திரோதயம். இந்தத் திரைப்படத்தில் மழை வெள்ளம் வந்து ஏழை மக்கள் குடிசைகள் நீரில் மூழ்கி விடும். அந்த மக்களை வேறு இடத்தில் தஞ்சம் வைப்பதற்காக MGR அனைத்து மக்களையும் கூட்டி செல்வது போல் படம் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த காட்சியில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் நடித்தனர்.

அப்போது மழையில் பாடல் பாடிக்கொண்டே நடந்து செல்வது போல் காட்சி எடுக்கப்பட இருந்தது. அப்போது செயற்கை மழை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது செயற்கையாக ஏற்பட்ட மழையில் ஜில் தண்ணீர் வந்ததால் ஷூட்டிங்கை நிறுத்த செய்திருக்கிறார் MGR. இந்த காட்சியில் சின்ன குழந்தைங்க எல்லாரும் நடிக்கிறாங்க அவங்களுக்கு பச்சை தண்ணீனா சேராது நேரம் ஆனாலும் பரவால்ல அந்த செயற்கை மழைக்கு உபயோகப்படுத்துற தண்ணிய சூடு படுத்துங்க. சூடு தண்ணியாதான் மழை வரட்டும் அப்படின்னு சொல்லி இருக்கிறார் MGR. இதன் மூலம் மக்கள் மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பது நமக்கு தெரிகிறது.
