பிரியங்காவுக்கு கிள்ளி கொடுத்த விஜய் டிவி.. வின்னருக்கு அள்ளி கொடுத்த டாப் குக்கு டூப் குக்கு.. பரிசுத்தொகை எவ்வளவுன்னு கேட்டா ஷாக் ஆயிருவீங்க..!!

By admin on புரட்டாதி 30, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதற்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

   

மீடியா மேஷம் நிறுவனம் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை நடத்தியது. அவர்களுடன் சேர்ந்து வெங்கடேஷ் பட நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவர் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கினார்.

   

 

அது மட்டுமில்லாமல்  ஜி பி முத்து, பரத், மோனிஷா ஆகிய கோமாளிகள் சன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் சோனியா அகர்வால்,  தீனா, ஐஸ்வர்யா தத்தா என பிரபலமான நபர்கள் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றனர். குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்று டைட்டிலை வென்ற பிரியங்காவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

ஆனால் டாப் குக் டுக் நிகழ்ச்சியில் திடீர் ட்விஸ்ட் ஆக இரண்டு பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில்  நாகேந்திர பிரசாதம் சுஜாதாவும் டைட்டிலை  வென்றனர். அவர்களுக்கு கோப்பையுடன் 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றியாளர் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

#image_title