அமரன் திரைப்படத்தின் ரியல் Hero மேஜர் முகுந்த் வரதராஜன்… அவரின் வாழ்க்கை வீரமரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

By admin on புரட்டாதி 29, 2024

Spread the love

இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்திருக்கும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்தத் திரைப்படம் ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். அவர் ராணுவத்தில் என்ன சாதனைகளை செய்தார் எப்படி வீர மரணம் அடைந்தார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

   

மேஜர் முகுந்த் வரதராஜன் 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். அவரது தாத்தா மற்றும் அவரது இரண்டு மாமாக்கள் ராணுவத்தில் பணியாற்றினர். இதனால் முகுந்த் வரதராஜனுக்கு சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவோடு இருந்தார். முகுந்த் வரதராஜன் அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மாணவராக இருந்தார். பட்டம் பெற்ற பிறகு 2006 ஆம் ஆண்டில் ராஜ்புத் ரெஜிமென்டல் லெப்ட்டின்ட் ஆக நியமிக்கப்பட்டார்.

   

மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் காலாட்படை பள்ளியில் பணியாற்றினார் முகுந்த் வரதராஜன். மேலும் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு ராஸ்ட்ரிய ரைஃபில் சீன் 44வது பட்டாலியனுக்கு நியமிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார் முகுந்த் வரதராஜன்.

 

முகுந்த் வரதராஜன் தனது நீண்ட நாள் காதலியான இந்து ரெபேக்கா வர்கிசை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு அஸ்ரேயா என்ற மகள் பிறந்தார். இவரது மனைவி முகுந்த் வரதராஜன் உடன் ஐந்து வருடங்கள் மட்டுமே திருமண வாழ்க்கையில் இருந்ததாகவும் அதிலும் வேறு வேறு இடத்தில் இருந்ததால் தன் கணவுடன் அதிகமாக வாழ்ந்தது ஒரு வருடம் மட்டுமே என்று கூறியிருக்கிறார் இந்து ரெபேக்கா வர்கீஸ்.

2014 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்த்து போராட முகுந்த் வரதராஜன் தலைமையில் ஒரு குழு கிளம்பியது. இந்த தாக்குதலின் போது மூன்று பயங்கரவாதிகளை கொன்றார் முகுந்த் வரதராஜன். ஆனாலும் இவரும் பயங்கரவாதிகளால் பயங்கரமாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். அதனால் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். இவரின் சேவையை பாராட்டி இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான அசோக சக்கரம் விருது இவரது மறைவிற்குப் பின் வழங்கப்பட்டது.

மேஜர் முகுந்த் வரதராஜன் பல அதிகாரிகளுக்கு முன்மாதிரியாகவும் தலைமைத்துவ திறன்களையும் தைரியத்தையும் திட்டமிடல் மற்றும் விரைவான நடவடிக்கை ஆகியவற்றை கொண்டிருந்தார். நாட்டுக்காக உயிரையும் துச்சம் என மதித்து போராடிய முகுந்த் வரதராஜன் தனது மகளுக்கு மூன்று வயதாக இருக்கும் போது தனது 31 வயதில் வீர மரணம் அடைந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தான் அமரன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.