விஜயை வழிநடத்த ஆள் இல்லை.. அந்த விஷயம் மட்டும் சரியா நடந்தா லட்சக்கணக்கான இளைஞர்கள் அவர் பின்னாடி.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்..!!

By admin on புரட்டாதி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக எச் வினோத் இயக்கும் 69-ஆவது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி விஜய் அரசியலில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்தார். விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் கொடியும், கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

   

வருகிற அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவுள்ளது. சினிமாவில் இருந்து விஜய் விலகியதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும் அடுத்து அரசியலில் அவர் என்னென்ன செய்யப் போகிறார் என்பதை காண எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

   

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு - காரணம் என்ன? - தமிழ்நாடு

 

இந்த நிலையில் பிரபல இயக்குனரான பிரவீன் காந்தி கூறியதாவது, விஜயின் மாநாடு சரியாக நடந்தால் 8 லட்சம் முதல் 10 லட்சம் இளைஞர்கள் விஜய் பின்னாடி வருவாங்க. இன்னும் விஜய் சாரை சரியாக வழி நடத்த ஆள் இல்ல. அவரு மாபெரும் சக்தி. ஒரு பெரியவர் என்கிட்ட நீங்க ஏன் விஜய் சார் 26- வது வருஷம் வரமாட்டாருன்னு சொன்னீங்க அப்படின்னு கேட்டாரு. நான் அவர்கிட்ட என்னங்க அப்படின்னு கேட்டேன்.

அதுக்கு அவரு மாற்றம் வரணும். கண்டிப்பா அவர் வரணும். அப்படின்னு சொன்னாரு. அவரு ரொம்ப பெரிய ஆளு. விஜய் சார் இவ்வளவு பேர மயக்கி வைத்திருக்கிறார் என்று எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு ரசிகன் காலையில் எழுந்து கட் அவுட்டுக்கு பால் ஊத்துறான். நேர்ல பார்த்தா என்ன செய்வான். தீயோட மறு உருவம் எல்லாம் 18 வயசுல இருந்து 25 வயசு வரை இருக்க பசங்க தான். அப்படிப்பட்ட பசங்க இன்னைக்கு 80 சதவீதம் பேர் விஜய் ரசிகன் தான் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.