சாய் தீனா தமிழ் சினிமாவில் பணியாற்றும் வில்லன் நடிகர், குத்துச்சண்டை வீரர் மற்றும் ஸ்டண்ட்மேன் ஆவார். ஆரம்பத்தில் சாய் தீனா ஒரு சைன்போர்டு கலைஞராக பணிபுரிந்தார். ரயில்வேயில் வேலை செய்வதற்கு முன் சில படங்களில் உதவியாளராக பணிபுரிந்தார் சாய் தீனா.

கமலஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் ஒரு சிறை காவலராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தீனா. பின்னர் சங்கர் இயக்கிய எந்திரன், அட்லீ இயக்கிய தெறி, வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை ஆகிய படங்களில் ரவுடி வேடத்தில் நடித்து பிரபலமானார் சாய் தீனா.
2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் தீனா. இந்த திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று தந்தது. இது மட்டுமல்லாமல் பல வெற்றி திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியிருக்கிறார் சாய் தீனா.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சாய் தீனா நாங்கள் எல்லாம் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து வந்தவங்க. உங்களுக்கு புடிச்ச சாப்பாடு என்னன்னு எங்ககிட்ட கேட்டா சோறு குழம்பு அவ்வளவுதான். அது இதுன்னு எதுவுமே எங்களுக்கு பிடித்தமான உணவு கிடையாது. எது கிடைச்சாலுமே சாப்பிடுவோம். எங்களை மாதிரி ஆளுங்களுக்கு அதுதான் நிலைமை என்று உருக்கமாக பேசியிருக்கிறார் சாய் தீனா.
