க்யூட்டான லுக்கில் ஓணம் கொண்டாடிய கேரளத்து பைங்கிளி மியா ஜார்ஜ்.. ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on புரட்டாதி 16, 2024

Spread the love

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் தான் நடிகை மியா ஜார்ஜ். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்த அங்கு பிரபலமான நடிகையாக வலம் வந்தார். மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவர் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக திகழ்ந்தார்.

   

இதைத் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க தொடங்கியதால் தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது. இவர் நடிகை ஆவதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகை தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

   

 

ஆரம்ப கட்டத்தில் டாக்டர் லவ், ஈ அடுத்த காலத்து உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களை ஏற்று நடித்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டில் சிறந்த கேரளா அழகியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தொடர்ந்து மலையாளத்தில் நடித்து புகழ்பெற்ற இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

இவருடைய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தன்னுடைய நடிப்பு மற்றும் அழகால் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நேற்று இன்று நாளை, வெற்றிவேல் மற்றும் ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கு தற்போது மிகப்பெரிய தமிழ் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொலைக்காட்சி மேடையில் இருந்து சினிமா வரை பல வெற்றிகளை இவர் குவித்துள்ளார்.

இதனிடையே இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஓணம் கொண்டாடிய அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.