தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.
தமிழ் சினிமாவுக்குப் பாலு மகேந்திரா அளித்த மற்றொரு பங்களிப்பு என்றால் அவரிடம் இருந்து வந்த உதவி இயக்குனர்கள் சிறப்பான படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்ததுதான். தான் அவரிடம் இருந்து பாலா, இயக்குனர் ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி மற்றும் துரை செந்தில்குமார் போன்ற இயக்குனர்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ளனர். இந்நிலையில் பாலா சேது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வுகளை உண்டாக்கினார்.

#image_title
அந்த படத்தில் பணியாற்றிய அமீர் மற்றும் சசிகுமார் போன்றவர்கள் சில ஆண்டுகளில் பருத்திவீரன் மற்றும் சுப்ரமண்யபுரம் ஆகிய கல்ட் திரைப்படங்களை இயக்கினர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சசிகுமார் அளித்த நேர்காணல் ஒன்றில் சேது படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் “சேது படத்தின் ஷூட்டிங் நான்தான் அதிகமாக திட்டு வாங்குவேன். ஏனென்றால் நாந்தான் கடைசி உதவி இயக்குனர் மற்றும் சினிமாவுக்குப் புதிது. அதே போல அமீர் அண்ணனையும் பாலா அண்ணன் திட்டுவார். பதிலுக்கு அமீரும் அவரை திட்டுவார். இருவரும் வாடா போடா என்றுதான் பேசிக் கொள்வார்கள்.

#image_title
என்னதான் திட்டினாலும் பாலா அண்ணன் எதற்காக இருந்தாலும் அமீரைதான் தேடுவார். எப்போதும் ‘அமீர் எங்கே? அமீர் எங்கே என்றுதான் கேட்டுக் கொண்டிருப்பார். அப்படியொரு நட்பு அவர்களுக்குள் இருந்தது. இரண்டு பேரும் சமாளிப்பதற்குக் கடினமான நபர்கள். அதிலும் பாலா அண்ணன் ரொம்ப ஹாட்” எனக் கூறியுள்ளார்.
