இந்த படம் வேற மாதிரி இருக்கும்.. அந்த விஷயம் சரியா இருந்தா அரசியலுக்கு வருவேன்.. லெஜன்ட் சரவணன் ஓபன் டாக்..!!

By admin on புரட்டாதி 14, 2024

Spread the love

லெஜன்ட் சரவணன் ஜெர்ரி& ஜேடி ஆகியோர் இயக்கிய தி லெஜன்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகி 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த நிலையில் எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார்.

   

இவரது இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லெஜன்ட் சரவணன் கூறியதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆகும்.

   

 

அண்மையில் ரிலீசான மகாராஜா, டிமான்டி காலனி, கருடன் போன்ற படங்கள் நல்ல கதை அம்சத்தை கொண்டவையாக இருந்ததால் மக்களிடம் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. அது போன்ற கதையில் தான் நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கும். எனது இந்த இரண்டாவது படமும் வெற்றி படமாக அமையும்.

இந்த படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மும்மூனைப் போட்டியில் நிலவும். சரியான கூட்டணி அமைப்பவர்களே வெற்றி பெற முடியும். தனித்து யாரும் வெற்றி பெற முடியாது. எனக்கு சினிமா, தொழில் துறை, அரசியல் மூன்றுமே மிகவும் பிடிக்கும். மூன்று துறையிலும் நான் பயணிப்பேன் என லெஜெண்ட் சரவணன் கூறியுள்ளார்.