பிரிவிற்கு பின் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்கள்.. அந்த ஒரு பாடலில் இப்படி ஒரு ஸ்பெஷாலிட்டியா..?

By admin on புரட்டாதி 12, 2024

Spread the love

கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும். கடந்த 1980-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான காளி திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் வைரமுத்து. இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்தார். இளையராஜா இசையில் வைரமுத்து பாடல் வரிகளில் வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும்.

   

கடந்த 1986-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ரிலீசான புன்னகை மன்னன் திரைப்படத்தில் தான் கடைசியாக இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். அந்த படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் வைரமுத்து தான் எழுதினார். இருவரும் இணைந்து வேலை பார்த்த கடைசி படம் புன்னகை மன்னன். ஆனால் இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வெளியான கடைசி பாடல் சிறை பறவை என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.

   

 

கடந்த 1986-ஆம் ஆண்டு தெலுங்கில் சுவாதி முத்தையா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற டைட்டிலில் படத்தை ரிலீஸ் செய்தனர். அதில் கமல்ஹாசனும், ராதிகாவும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்காக பாடல்களை எழுத வைரமுத்துவிடம் தயாரிப்பாளர் கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிந்து இருந்தனர். ஆனாலும் வைரமுத்து அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு வரிகளை எழுதினார்.

அதில் துள்ளித்துள்ளி நீ பாடம்மா என்ற பாடல் இன்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலை பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இணைந்து பாடியுள்ளனர் 10 நிமிடத்தில் தமிழுக்கு ஏற்றவாறு வரிகளை அமைத்து வைரமுத்து பாடலை எழுதியுள்ளார். ராமாயணத்தில் வரும் சம்பவங்களை வைத்து அந்த பாடல் எழுதப்பட்டது. மகிழ்ச்சியாக தொடங்கும் பாடலை என் ஜானகி தனது குரலில் கடைசியாக சோகத்தில் முடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Thulli Thulli Nee Paadamma Lyrics - Sippikkul Muthu Song Lyrics in Tamil  (தமிழ்) & English