சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போன நடிகர் நடிகைகள் பலர். அதில் ஒருவர் தான் பிரியா பவானி ஷ்ங்கர். தமிழ் செய்தி சேனல் ஆன புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் பிரியா பவானி ஷ்ங்கர். அதன் மூலம் சின்னத்திரை தொடரில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்தார். இந்த தொடர் மிகப் பிரபலமானது. இதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற்றார் பிரியா பவானி ஷ்ங்கர். 2017 ஆம் ஆண்டு வைபவ்க்கு ஜோடியாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியா பவானி ஷ்ங்கர்.
2018 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் இரண்டாம் நடிகையாக நடித்தார். இதன் மூலம் பிரபலமான பிரியா பவானி ஷ்ங்கர். தொடர்ந்து அசுரன், களத்தில் சந்திப்போம், ஓ மன பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார் பிரியா பவானி ஷ்ங்கர்.
இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 மற்றும் டிமான்டி காலனி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார் பிரியா பவானி ஷ்ங்கர். டிமான்டி காலனி 2 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் அவருக்கு கிடைத்தது. இருந்தாலும் இவரை நெட்டிசன்கள் பலவாறு கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். அதற்கு அவர் கூறிய பதிலை இனி பார்ப்போம்.

என்னை எல்லாருமே நிறைய கிண்டல் பண்றாங்க. நான் லக்கி கிடையாது நான் நடிச்சா படம் ஓடாது. ஐயோ இவங்க படத்துல வந்துட்டாங்களா படமே அவ்வளவுதான் அப்படின்னு சொல்றாங்க. நான் கண்டிப்பா அதை ஒத்துக்க மாட்டேன். என்னால தான் ஒரு படம் ஓடல அப்படிங்கறது கிடையாது. ஒரு படத்துக்கு பின்னாடி ஏகப்பட்ட பேர் வேலை செய்றாங்க. என்ன ஸ்கிரீன்ல பாக்குறீங்களா என்னோட நடிப்பு சரியில்ல அப்படின்னு சொன்னீங்கன்னா அதை அடுத்த படத்துல எப்படி அதை இம்ப்ரூவ் பண்ணலாம் அப்படிங்கறதை நான் கண்டிப்பா யோசிப்பேன் மற்ற விஷயங்களை நான் ஒத்துக்க மாட்டேன் என்று ஓபனாக பேசி இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.
