தமிழ் சினிமாவில் மாதவன் நடித்த ஜே ஜே திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா அவினாஷ். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து ஜெயம் கொண்டான், டிஷ்யூம், வந்தான் வென்றான் மற்றும் பைரவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அண்ணி, சிதம்பர ரகசியம் மற்றும் செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அவினாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவரும் பிரபல வில்லன் நடிகர் தான். கன்னட மொழிகளில் மிகப்பெரிய பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழில் சந்திரமுகி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த தம்பதிகள் கடந்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்த நிலையில் தனது மகன் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள மாளவிகா அவினாஷ், என் மகனுக்கு இப்போது 16 வயது ஆகிறது. அவனால் எந்த வேலைகளையும் தன்னால் செய்து கொள்ள முடியாது. மூன்று நேரமும் சாப்பாடு ஊட்டுவதற்கு ஒரு ஆள் வேண்டும். பால் குடிக்கும் போது கூட ஒருவர் உடல் இருக்க வேண்டும். இந்த 16 வருடமாக நானும் என் கணவரும் ஒரு கண்டிஷன் வைத்துக் கொண்டோம்.

அதாவது இரவு நேரத்தில் இருவருமே இல்லாத சூழல் இருக்கக் கூடாது. எங்கையாவது செல்வது என்றால் ஒருவர் மட்டுமே இரவில் வெளியில் செல்ல முடியும். அப்படித்தான் இருந்தோம். தற்போது என் மகனுக்கு நானே சாப்பாடு ஊட்டுவதால் ஆறு மணிக்கு மேல் நடிப்பதில்லை. நானே என் மகனை தற்போது முழுமையாக கவனித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
